மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மும்மொழிக்கொள்கை தொடர்பாக பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர் இதற்கு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
