புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது – புதுச்சேரி முதலமைச்சர்

Spread the love

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மக்கள்கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் சித்த மருத்துவ சார்பில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத கல்வி கொள்கை, புதிய கல்வி கொள்கையால் புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்டுத்தான் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்புள்ள தற்போதைய சூழலில் மாணவர் கல்வி பயில மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு மாநில அரசுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page