புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,
மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், “கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது” கடும் கண்டனத்துக்குரியது என்ற கூறி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.