தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைய உள்ள நிலையில் அது தொடர்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையை கையாள்வது தொடர்பாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்பாகவும் 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளா, அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 6 மாநில முதல்மந்திர்கள்
பங்கேற்றனர். பிரதமர்-முதல்மந்திரிகளுடனான இந்த கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் மற்றும் மாநில அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிய ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்க மத்திய மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்