உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

ஜெனிவா,
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்” பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.52 கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் 1.76. லட்சம், பிரேசிலில் 1.11 லட்சம், ரஷ்யாவில் 15,989 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 56,99 லட்சம், பிரேசிலில் 34,60 லட்சம், ரஷ்யாவில் 9.37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.