இந்தியாவில் குறைந்தது நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முன்னணி தனியார் ஆய்வகத்தின் தலைவர் கூறி உள்ளார்.

மும்பை:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 977 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 28,36,926 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 53,866 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வியாழக்கிழமை காலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்த வழக்குகளில், 20,96,664 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று குணமாகி திரும்பி உள்ளனர்.இந்தியாவில்
கொரோனா நோயாளிகள் 6,86,395 சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட
நடத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் குறைந்தது நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை விட மிக அதிக எண்ணிக்கையில்ன கொரோனா பாதிப்பு இருக்கலாம் என முன்னணி தனியார் ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஏ வேலுமணி கூறி உள்ளார்.
டாக்டர் ஏ வேலுமணிகூறும் போது இந்தியா முழுவதும் தனது நிறுவனமான தைரோகேர் நடத்திய 270,000 ஆன்டிபாடி சோதனைகளின் பகுப்பாய்வில் சராசரியாக 26 சதவீத மக்களிடம் ஆன்டிபாடிகள் இருப்பதைக் காட்டியது,
ஏற்கனவே அவர்கள் கொரோனா வைரஸுக்கு ஆளாகியிருப்பதைக் குறிக்கிறது.
இது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான சதவீதமாகும். குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும்
ஆன்டிபாடிகள் இருப்பது ஒரே மாதிரியாக இருக்கிறது.
தைரோகேரின் கண்டுபிடிப்புகள் மும்பை போன்ற இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க ஆய்வோடு
ஒத்துப்போகின்றன, இது அதன் நெரிசலான சேரிப் பகுதிகளில் 57 சதவீத மக்கள் கொரோனா வைரஸுக்கு
ஆளாகியுள்ளதைக் காட்டுகிறது.
கடந்த ஏழு வாரங்களாக இந்தியாவில் 600 நகரங்களை உள்ளடக்கிய, பணம் செலுத்திய மற்றும் பரிசோதிக்கப்பட்ட
நோயாளிகளை தைரோகேர் ஆய்வுக்கு உட்படுத்தியது. தற்போதைய போக்கு தொடர்ந்தால், ஆன்டிபாடிகள் கொண்ட
இந்தியாவின் மக்கள் தொகை சதவீதம் டிசம்பர் இறுதிக்குள் 40 சதவீதத்தை எட்டக்கூடும் என கூறி உள்ளார்.