ரஷிய அதிபர் புதினை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர் விஷம் கொடுக்கப்பட்டார் – தீவிர சிகிச்சை பிரிவில்

Spread the love

ரஷிய அதிபர் புதினை கடுமையாக எதிர்க்கும் அலெக்ஸி நவல்னி விஷம் கொடுக்கப்பட்டார் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மாஸ்கோ

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இன்று சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் டுவிட்டரில் நவல்னி வென்டிலேட்டரில் கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“அலெக்ஸி தனது தேநீரில் விஷம் கலந்து குடித்ததாக நாங்கள் நினைக்கிறோம். காலையில் அவர் குடித்தது அதுதான்” என்று அவர் டுவிட்டரில் கூறி உள்ளார்.

“இது வேண்டுமென்ற விஷம் கொடுக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மாஸ்கோ வானொலி நிலையத்தின் எக்கோவிடம் கூறினார்.

ஓம்ஸ்க் அவசர மருத்துவமனை எண் 1 இல் நச்சுயியல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் நவல்னி இருப்பதாக மாநில செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு பிரச்சாரகரான நவால்னி, ஜனாதிபதி விளாடிமிர் புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்தார்

நவல்னியின் வழக்கறிஞர்கள் ஒரு பொது நபரை படுகொலை செய்ய முயன்றது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறி உள்ளனர்.

நவல்னி முன்னர் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளார்.

2017 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தியவர்கள் அவரது அலுவலகத்திற்கு வெளியே அவரது முகத்தில் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படும் பச்சை சாயத்தை வீசியபோது அவர் கண்ணில் ரசாயன தீக்காயங்கள் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக போலீஸ் தடுப்பு மையத்தில் இருந்தபோது நவல்னி பாதிக்கப்பட்டார் மற்றும் அவரது முகம் வீங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page