அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்திய ஈரான்

Spread the love

அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 2 புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்தியது.


டெஹ்ரான்,

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக வேறு எந்த நாடுகள் மீதும் விதிக்காத அளவுக்கு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் கடுமையான தடைகளை விதித்து வருகிறது. ஆனால் அந்த பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் விண்வெளி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஏவுகணைகளுக்கு அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளிக் குழுவின் தலைவர் அபு மக்தி அல் முக்திஸ் ஆகியோரின் பெயரை ஈரான் ராணுவம் சூட்டியுள்ளது.

 

நிலத்திலிருந்து செல்லக்கூடிய ‘தியாகி ஹஜ் காசிம்‘ ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்தது என்றும், கடலிலிருந்து செலுத்தக்கூடிய ‘தியாகி ஹஜ் மக்தி’ ஏவுகணை ஆயிரம் தாக்கும் திறன் கொண்டது என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இவற்றுடன் ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தப்படும் 4-ம் தலைமுறை டர்போ எஞ்சினையும் ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் ‘மீள் தடை’ அம்சத்தின் மூலம் ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் சூழலில் ஈரான் புதிய ஆயுதங்களை அறிமுகப்படுத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page