நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,
மருத்துவ படிப்பகளில் சேருவதற்காக நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வும் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதேபோல், ஜேஇஇ. முதன்மை தேர்வும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த நிலையில், நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.