கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களில் இறக்குமதி வெகுவாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கின் விளைவாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி கடுமையாக பாதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
மேலும் பள்ளி கல்லூரிகளில் தற்போது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுவதால், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து விற்பனையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மின்னனு சாதனங்களை பெருமளவில் இறக்குமதி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 5.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின. இந்நிலையில் இந்த ஆண்டு விற்பனை 13 முதல் பதிமூன்றரை கோடியாக அதிகரிக்க கூடும் என கணிக்கப்படுகிறது.