பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களிடம் இழப்பீடு வசூலிக்கும் மசோதாவை எதிர்ப்போம் என உத்தரபிரதேச எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

லக்னோ,
உத்தரபிரதேசத்தில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் பொதுச்சொத்துகளையும், தனியார் சொத்துகளையும் சேதப்படுத்தினர். அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக, கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேச அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி தொடங்கியது. அந்த அவசர சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து அளிப்பதற்கான மசோதாவை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்போவதாக உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க போவதாக சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.