தலிபான்கள் மீது பொருளாதாரத் தடைகளைச் விதிக்குமாறு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் கேட்கிறது

Spread the love

தலிபான்கள் மீது ஐ.நா கேட்டுகொண்ட பொருளாதாரத் தடைகளைச் விதிக்குமாறு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் கேட்டு கொண்டு உள்ளது.


காபூல்

ஆகஸ்ட் 18 அன்று, பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த ஒரு சட்டரீதியான ஒழுங்குமுறை உத்தரவை பிறப்பித்தது, இதில் தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க்கின் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக சொத்துக்கள் முடக்கம், பயண தடை மற்றும் ஆயுதங்களை அணுக மறுப்பது ஆகியவை அடங்கும்.

ஒரு வாரத்திற்குள், குழுவின் துணை அரசியல் தலைவரான முல்லா அப்துல் கானி பரதர் தலைமையிலான ஒரு தலிபான் தூதுக்குழு திங்களன்று இஸ்லாமாபாத்திற்கு ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வந்து சேர்ந்தது.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி செவ்வாய்க்கிழமை மாலை வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்த தலிபான் தூதுக்குழுவை தனிப்பட்ட முறையில் வரவேற்றார். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.

வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி தலிபான் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அனுமதிக்கப்பட்ட பல தலைவர்களை உள்ளடக்கிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான ஐ.நா.பாதுகாப்புக் பொருளாதாரத் தடைகளை முழுமையாக அமல்படுத்துமாறு ஆப்கானிஸ்தான் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.

இது குறித்து ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்பு “கவனமாக பரிசீலிக்கப்பட்டு முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டது”. அனைத்து நாடுகளும் ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் 2255, 1988, 1267 மற்றும் 2253 ஆகியவற்றுடன் இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, மேலும் ஆப்கானிஸ்தான் “பாகிஸ்தானின் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது … மேற்கூறிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் சர்வதேச பொறுப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள், ஆயுதத் தடை மற்றும் தலிபானுடன் இணைந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான நிதி முடக்கம் உள்ளிட்ட ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தடைகளை அமல்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களுடன் “சீக்கிரம் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், நீடித்த மற்றும் கண்ணியமான அமைதிக்கு முழு அர்ப்பணிப்பையும் ஏற்படுத்த வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page