இனி ஆதார் விவரங்களை மாற்ற கட்டணம் ரூ.100 நிர்ணயம்

Spread the love

இனி ஆதார் விவரங்களை மாற்ற ரூ .100 கட்டணமாக யுஐடிஏஐ நிர்ணயித்து உள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் அடையாளம் மற்றும் முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாக இருக்குப்பது ஆதார் அட்டையாகும் 12 இலக்க ஆதார் அடையாளத்தை சரிபார்ப்பு தளத்தை நிர்வகித்து வரும் நிறுவனமான யுஐடிஏஐ, தேவைப்பட்டால், புள்ளிவிவரங்கள் அல்லது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிமுறையை செய்தூள்ளது.

ஒரு பயனர் ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ அல்லது வலைத்தளத்தைப் மூலமாகவோ தங்கள் ஆதார் அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ளலாம்.

இதற்கான கட்டணத்தை தற்போது யுஐடிஏஐ, நிர்ணயித்து உள்ளது.

நீங்கள் ஒன்றை அல்லது பலவற்றைப் புதுப்பித்தாலும், ஆதார் புதுப்பிப்புக்கான கட்டணங்கள் ரூ .100 (நீங்கள் பயோமெட்ரிக்ஸையும் புதுப்பிக்கிறீர்கள் என்றால்) மற்றும் ரூ .50 (புள்ளிவிவர விவரங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டால்) என யுஐடிஏஐ ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளது

அவ்வாறு செய்ய, பெயர் அல்லது முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற முக்கியமான புள்ளிவிவர தகவல்களை மாற்ற பயனர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 32 ஆவணங்களையும், முகவரிச் சான்றாக 45 ஆவணங்களையும், பிறப்புக்கான ஆதாரமாக 15 ஆவணங்களையும் யுஐடிஏஐ பட்டியலிட்டுள்ளது. இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தகவல்களைப் புதுப்பிக்கப் பயன்படுத்தலாம்.

சரிபார்ப்புக்கான எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதாரில் சில மாற்றங்களைச் செய்யலாம். உதாரணமாக, மொபைல் எண், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் எந்த ஆவணமும் இல்லாமல் மாற்றப்படலாம். மேலும், பயோமெட்ரிக்ஸ், பாலினம் மற்றும் மின்னஞ்சல் ஐடியையும் விவரங்களை ஆவணம் இல்லாமல் புதுப்பிக்க முடியும். என கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page