சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 45 ஆக அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை,
சென்னையில் நாள்தோறும் 1,200 முதல் 1,300 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கிறது.
கடந்த வாரம் 15 மண்டலங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்திருந்தது. இதையடுத்து மீண்டும் சில நாட்களில் 35 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகள் 45 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் 12 பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 8 பகுதிகள், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 பகுதிகள், அடையாறு மண்டலத்தில் ஒரு பகுதி, ஆலந்தூர் மண்டலத்தில் 10 பகுதிகள், பெருங்குடி மண்டலத்தில் ஒரு பகுதி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 3 பகுதிகள் என மொத்தம் 45 பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.