புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
புதுச்சேரியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தற்போதைய நடைமுறையே அமலில் இருக்கும். ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும். முழு முடக்கம் இனி இல்லை. புதுச்சேரியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தற்போதைய நடைமுறையே அமலில் இருக்கும்.
மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசின் நடவடிக்கைகள் பயனளிப்பதில்லை. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் 32 பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என்ற உத்தரவு மாற்றம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களை தவிர மற்ற பகுதிகளை தனிமைப்படுத்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.