இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும், பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரெயில் சேவை தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் செப்டம்பரிலும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட தளர்வுகள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
* தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படும்.
* ஞாயிற்றுகிழமைகளில் முழு முடக்கம் இல்லை.
* தமிழகத்தில் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.
* சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி
* இ-பாஸ் நடைமுறை ரத்து, பொதுப்போக்குவரத்து, செப்டம்பர் 7-ம் தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடரும்.
* வரும் 1-ம் தேதி மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.