திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதார்.
திருப்பூர்,
முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் காங்கேயம் இடத்தில சோதனைச்சாவடியில் நேற்று நள்ளிரவில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றது. அப்பொழுது காங்கேயம் அடுத்த, திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் அந்த லாரியை மடக்கிப் பிடிக்க அங்கிருந்த போலீசார் முயற்சித்தனர். அங்கும் அந்த லாரி நிற்காமல் சென்றது.
இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஆயுதப்படை காவலர் பிரபு என்பவர் லாரியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். அப்போது அந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குளானது. இதில் சம்பவ இடத்திலே காவலர் பிரபு உயிரிழந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் மேலும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.