கொரோனா பாதிப்புக்களை பயன்படுத்தி யாரும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்தை தேடக்கூடாது என்று போப் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாடிகன் சிட்டி,
வாடிகன் சிட்டியில் சான் டமாசோ அரங்கில் நடந்த வாராந்திர கூட்டத்தில் சுமார் 500 பார்வையாளர்கள் முன்பு போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்புக்களை பயன்படுத்தி யாரும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்தை தேடக்கூடாது. தடுப்பூசி உருவாக்குபவர்கள் அதை வெறும் லாபம் ஈட்டும் முயற்சியாக பார்க்கக்கூடாது. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை சிலர் மக்களிடையே பிளவுகளைத் தூண்டுவதற்கும், பொருளாதார, அரசியல் பிளவுகளைத் தேடுவதற்கும், மோதலைத் தொடங்குவதற்கும் அல்லது தீவிரப்படுத்துவதற்கும் நிலைமையைப் பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.