கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்கள் ஊழியர்களை பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், உலகின் முன்னணி நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் தரப்பில் இது குறித்து கூறுகையில், கொரோனா பேரிடர் நமது சிந்தனை, வாழ்க்கை முறை, வேலை என அனைத்தையும் மாற்றிவிட்டது. எனவே, ஊழியர்களின் வசதிக்கேற்ப பணியாற்றும் சூழலை வடிவமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வீட்டில் இருந்தே நிரந்தரமாக பணியாற்ற அனுமதி கொடுக்கப்படுமா?என்பது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை.