சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கவுள்ள திட்டத்தை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை-கன்னியாகுமரி இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டம் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்குவதை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் சென்னை-கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழிப் போக்குவரத்து திட்டம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைவில் முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சென்னை-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.