ஏவுகணை நாயகன் டாக்டர் APJ. அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாள் சமத்துவ மக்கள் கழகம் கொண்டாட்டம்!
இளைஞர்களின் எழுச்சி நாயகன் ‘டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம்’ அவர்களின் 89 ஆவது
பிறந்தநாளான இன்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நம் அக்னி நாயகன் அப்துல் கலாம் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய
திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை
வழங்கினார்.இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த
நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர் இவருடைய சாதனைகளால்
பத்ம பூஷன், பத்ம விபூஷன் அரசு வழங்கியுள்ளது நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும்
பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.
முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாமின் பிறந்தநாளில் அலங்கரிக்கப்பட்ட அவருடைய
திருவுருவ படத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து
மலர் தூவி மரியாதை செலுத்தினார்
நிகழ்ச்சியில் கழக பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, மாநில
துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், வடக்கு மாவட்ட
செயலாளர் மதுரைவீரன், மகளிரணி மாலதி, கழகப் பேச்சாளர் தேவி, நிர்வாகிகள் ரவி,திருவொற்றியூர் பகுதி
செயலாளர் முத்துக்குமார் சீனிவாசன், சண்முகம், ஸ்டாலின், அன்பரசன், வேல்பாண்டி, புருஷோத்தமன்,
சீனிவாசன், தங்கராஜ், அபீப்,பாக்யராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்