அமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு

Spread the love

அமெரிக்காவும் ஈரானும் எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.


கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பயங்கரவாதியாக அறிவித்தது.

மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, ஈரான் நாட்டு நீதிமன்றம் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது.

காசிம் சுலைமானி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஈரான் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் ஈரான் தலைமை நீதிபதி இம்ராஹிம் ரைசி பேசுகையில், சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானும் பாரசீக வளைகுடாவில் பதற்றங்களைத் தூண்டுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வளைகுடா மற்றும் ஓமன் கடலில் “இராணுவ பயிற்சி செய்வதை அமெரிக்கா நிறுத்துமாறு ஈரான் வியாழக்கிழமை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்தது.

டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குமாறு இஸ்ரேலும் ,சவுதி அரேபியாவும் வற்புறுத்தி வருவதாக பெயரிடப்படாத அமெரிக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு அரபு ஊடகங்கள் அறிக்கையை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன.

பெயர் வெளியிடாத நிலையில் பேசிய மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி, ஈரானில் இருந்து மிகவும் கணிசமான அச்சுறுத்தல்களின் சமீபத்திய அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது என்றும், ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களைத் திட்டமிடுவதும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடலாம் என்பதற்கான அறிகுறிகளையும் அமெரிக்கா கண்டறிந்து உள்ளது என மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page