மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர் முயற்சியாக, ரெயில்வே துறையின் ஐ.சி.எப். தொழிற்சாலையில் “மய்யம் ஐ.சி.எப். தொழிற்சங்கம்” எனும் பெயரில் தமிழகத்தில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான சான்றிதழோடு கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி, தொழிற்சங்கத்தின் தலைவர் ஜிம்.கே.மாடசாமி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது கட்சியின் துணை தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன், தொழிலாளர் நல அணி மாநில துணைச் செயலாளர் டி.சேகர், நற்பணி இயக்க மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.