மங்களூரு-நாகர்கோவில், கோவை இடையே சிறப்பு ரெயில்கள் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Spread the love

வருகிற 6-ந் தேதி முதல் மங்களூரு-நாகர்கோவில், கோவை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில்வே வாரியம் கீழ்க் கண்ட சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதி வழங்கி உள்ளது.

* மங்களூரு-நாகர்கோவில் (வண்டி எண்: 06605) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 6-ந் தேதி முதல் தினசரி காலை 7.20 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-மங்களூரு (06604) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந் தேதி முதல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்படும்.

* கோவை-மங்களூரு (06323) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 6-ந் தேதி முதல் தினசரி காலை 7.55 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக மங்களூரு-கோவை (06324) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந் தேதி முதல் காலை 9 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page