கர்நாடகத்தில் புதிதாக 25311 பேருக்கு கொரோனா

Spread the love

கர்நாடகத்தில் புதிதாக 25,311 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 529 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மீண்டவர்கள் எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 8 ஆயிரத்து 723 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 25,311 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 50 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 529 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 57,333 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 83 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 435 ஆக உள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5,701 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோலாரில் 580 பேர்

பாகல்கோட்டையில் 283 பேர், பல்லாரியில் 807 பேர், பெலகாவியில் 747 பேர், பெங்களூரு புறநகரில் 385 பேர், பீதரில் 58 பேர், சாம்ராஜ்நகரில் 439 பேர், சிக்பள்ளாப்பூரில் 605 பேர், சிக்கமகளூருவில் 633 பேர், சித்ரதுர்காவில் 541 பேர், தட்சிண கன்னடாவில் 721 பேர், தாவணகெரேயில் 633 பேர், தார்வாரில் 1,058 பேர், கதக்கில் 277 பேர், ஹாசனில் 1,156 பேர், ஹாவேரியில் 312 பேர், கலபுரகியில் 245 பேர், குடகில் 251 பேர், கோலாரில் 580 பேர், கொப்பலில் 337 பேர், மண்டியாவில் 888 பேர், மைசூருவில் 2,680 பேர், ராய்ச்சூரில் 753 பேர், ராமநகரில் 285 பேர், சிவமொக்காவில் 730 பேர், துமகூருவில் 1,662 பேர், உடுப்பியில் 927 பேர், உத்தரகன்னடாவில் 1,110 பேர், விஜயாப்புராவில் 256 பேர், யாதகிரியில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 297 பேரும், பாகல்கோட்டையில் 7 பேரும், பல்லாரியில் 19 பேரும், பெலகாவியில் 17 பேரும், பெங்களூரு புறநகரில் 18 பேரும், பீதரில் 2 பேரும், சாம்ராஜ்நகரில் 13 பேரும், சிக்பள்ளாப்பூரில் 6 பேரும், சிக்கமகளூருவில் 7 பேரும், சித்ரதுர்காவில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 3 பேரும், தாவணகெரேயில் 3 பேரும், தார்வாரில் 15 பேரும், கதக்கில் 2 பேரும், ஹாசனில் 14 பேரும், ஹாவேரியில் 7 பேரும், கலபுரகியில் 9 பேரும், குடகில் 4 பேரும், கோலாரில் 9 பேரும், கொப்பலில் 4 பேரும், மண்டியாவில் 4 பேரும், மைசூருவில் 11 பேரும், ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 2 பேரும், சிவமொக்காவில் 16 பேரும், துமகூருவில் 11 பேரும், உடுப்பியில் 4 பேரும், உத்தரகன்னடாவில் 6 பேரும், விஜயாப்புராவில் 5 பேரும், யாதகிரியில் 5 பேரும் என மொத்தம் 529 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இது கர்நாடக அரசை கவலை அடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page