தமிழகத்தில் நேற்று 34,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,62,284 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1,164 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5,377 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4,041 பேரும், கோவையில் 3,632 பேரும், செங்கல்பட்டில் 1,870 பேரும், திருப்பூரில் 1,854 பேரும், ஈரோட்டில் 1,555 பேரும், திருவள்ளூரில் 1,425 பேரும், மதுரையில் 1,358 பேரும், திருச்சியில் 1,110 பேரும், கன்னியாகுமரியில் 1,133 பேரும், தஞ்சாவூரில் 1,105 பேரும், விருதுநகரில் 1,015 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 215 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
468 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 290 பேரும், தனியார் மருத்துவமனையில் 178 பேரும் என 468 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 88 பேர் பலி
அந்தவகையில், அதிகபட்சமாக சென்னையில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 36 பேரும், திருப்பூரில் 25 பேரும், கோவை, காஞ்சீபுரத்தில் தலா 24 பேரும், தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் தலா 20 பேரும், சேலத்தில் 18 பேரும், திருச்சியில் 17 பேரும், திண்டுக்கலில் 16 பேரும்,
தென்காசியில் 14 பேரும், ஈரோட்டில் 13 பேரும், விருதுநகர், மதுரை, கரூரில் தலா 10 பேர், குறைந்தபட்சமாக திருவாரூரில் ஒருவர் என நேற்று மட்டும் 32 மாவட்டங்களில் 468 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இணை நோய் அல்லாதவர்கள் 134 பேர் அடங்குவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 21 ஆயிரத்து 340 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
28,745 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 28,745 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 3 லட்சத்து 1,580 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.