தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச்செயலாளர் வே.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கூடுதல் தலைமைச்செயலாளராக இருந்த நஜிமுதீன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த நிர்மல் ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளராக இருந்த வெங்கடேஷ், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்த மோகன் மாற்றப்பட்டு சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.