உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.14 கோடியாக உயர்வு

Spread the love

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.38 கோடியை தாண்டியது.


ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.14 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,14,51,602 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,38,97,886 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 64 ஆயிரத்து 596 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,39,89,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,741 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 3,41,13,146, உயிரிழப்பு – 6,09,767, குணமடைந்தோர் – 2,78,63,840
இந்தியா – பாதிப்பு – 2,81,73,655, உயிரிழப்பு – 3,31,909, குணமடைந்தோர் – 2,59,39,504
பிரேசில் – பாதிப்பு – 1,65,47,674, உயிரிழப்பு – 4,62,966, குணமடைந்தோர் – 1,49,64,631
பிரான்ஸ் – பாதிப்பு – 56,67,324, உயிரிழப்பு – 1,09,528, குணமடைந்தோர் – 53,33,723
துருக்கி – பாதிப்பு – 52,49,404, உயிரிழப்பு – 47,527, குணமடைந்தோர் – 51,14,624

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா – 50,71,917
இங்கிலாந்து – 44,87,339
இத்தாலி – 42,17,821
அர்ஜெண்டினா- 37,81,784
ஜெர்மனி – 36,89,918
ஸ்பெயின் – 36,78,390
கொலம்பியா – 34,06,456
ஈரான் – 29,13,136
போலந்து – 28,72,283
மெக்சிக்கோ – 24,12,810

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page