மணல் மற்றும் கனிமவள கொள்ளை : சென்னை ஐகோர்ட்டின் கடும் எச்சரிக்கை

Spread the love


தமிழ்நாட்டில் மணல் மற்றும் கனிமவள கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

கனிமவளத்துறை தாக்கல் செய்த அறிக்கை – முக்கிய அம்சங்கள்

விசாரணையின் போது, புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையர் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்:

மணல் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் GPS கருவி பொருத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த GPS பொருத்தும் பணிகள் 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது.

2020 முதல் 2025 நவம்பர் வரை மொத்தம் 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.இவை தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அரசின் நடவடிக்கைகள் பெயரளவில் மட்டுமே உள்ளன என கடுமையாக விமர்சித்தனர்.

நீதிபதிகள் எழுப்பிய முக்கிய கேள்விகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது?

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கனிமவளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில்,
வெறும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதால் என்ன பயன்?

இதுபோன்ற தண்டனைகள், கனிமவள கொள்ளையைத் தடுப்பதற்குப் பதிலாக ஊக்குவிப்பதாகவே உள்ளது என்ற மறைமுக குற்றச்சாட்டையும் நீதிமன்றம் முன்வைத்தது.

மணல் மாபியா – அரசியல், பணபலம்

அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் கொண்டு
மாபியா கும்பல்களைப் போல மணல் கொள்ளையர்கள் செயல்படுகின்றனர் என கடுமையாக குறிப்பிட்டனர்.

இது சுற்றுச்சூழலுக்கும், அரசின் வருவாயுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறினர்.

மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு

மணல் மற்றும் கனிமவள கொள்ளையைத் தடுப்பது:

சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் நேரடி பொறுப்பு என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

சட்டவிரோத செயல்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் அளிக்காவிட்டால்,
அவர்கள்மீது மாவட்ட கலெக்டர்கள் கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

வேண்டும் என உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page