கொரோனா நிவாரணம் பெற கிராம கோவில் பூசாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவெனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் இயங்கி வரும் கிராம கோவில் பூசாரி நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோருக்கு நிவாரண உதவித்தொகை ரூ.1,000 வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரண உதவித்தொகை பூசாரிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
சென்னை உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராம கோவில் பூசாரிகள் தங்களது பெயர், கைப்பேசி எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க விவரம் மற்றும் அடையாள அட்டை விவரம் ஆகியவற்றை சென்னை இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்களிடம் தெரிவிக்கலாம். மேலும் ac-c-hn@tnh-r-ce.com என்ற மின்னஞ்சல் மூலமும் விவரங்களை அனுப்பலாம். இதற்காக சென்னை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வர தேவையில்லை.
கிராம கோவில் பூசாரிகள் அணுக வேண்டிய சென்னை சரக ஆய்வாளர்களின் வாட்ஸ்-அப் எண்கள் விவரம் வருமாறு:-
திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, 9789026537, பெரம்பூர், மாதவரம் 9941326101, புரசைவாக்கம் 9444427755, மயிலாப்பூர் 7358738847, அமைந்தகரை, அயனாவரம், அம்பத்தூர், மதுரவாயல், எழும்பூர் 9445532743 கிண்டி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தாம்பரம், மாம்பலம், பல்லாவரம் 8190057013 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.