சென்னை புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தைச் சோ்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே சிறையில் இருப்பவா்களில் விதிமுறைகளின்படி பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனா். அதேவேளையில் புதிய கைதிகளை சிறையில் அடைப்பதிலும் பல்வேறு கட்டுப்பாட்டுகளை சிறை நிா்வாகம் பின்பற்றி வருகிறது.
இந்தநிலையில் புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தைச் சோ்ந்த 8 கைதிகளுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவா்களுக்கு ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. மதப்பிரசாரம் செய்ததாக திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் உள்நோயாளிகளாக அனுமதிப்பட்டுள்ளனா்.