உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இனம், மதம், நிறம், சாதி, மொழி, பார்த்து தாக்காது ஒற்றுமையாக போராடுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 40 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் இன்று மாலை வரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16116-ஆக அதிகரித்துள்ளது. 2301 பேர் குணமடைந்துள்ளனர். 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் நோயின் வீரியத்தை அறியாமல் சிலர் கட்டுப்பாட்டை மீறுகின்றனர். இதனால் அதிகாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா தாக்குவதற்கு முன் இனம், மொழி மதம், நியம், சாதி, மதம் பார்க்காது. நம்முடைய பதில்கள், நடத்தை ஆகியவை ஒருங்கிணைப்பு மற்றும் சகோதரத்துவத்தை முதன்மையாக கொண்டதாகவே இருக்க வேண்டும். நாம் இதில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.