54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வைரஸ் தொற்று எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஆயிரத்து 334 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியின் மாகே மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிய தொற்று எதுவும் இல்லை என்றும், மேலும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகளவாக மராட்டியத்தில் 4203 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 223 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 2003 பேரும், குஜராத்தில் 1743 பேரும், தமிழகத்தில் 1477 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 1407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதிகபட்ச பாதிப்புகளை சந்தித்து வரும் மராட்டியம் 4,203 பாதிப்புகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில் மட்டும் 223 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக 2003 பாதிப்புகள் மற்றும் 45 உயிர்ப்பலிகளுடன் 2வது இடத்தில் உள்ள டெல்லியில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 உயிரிழப்புகள் 1,743 பாதிப்புகளுடன் குஜராத் மாநிலம் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது. 4ம் இடத்திலுள்ள ராஜஸ்தானில் 1,478 பேரும் 5ம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில் 1,477 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட 7வது மாநிலமாக உத்தர பிரதேசம் உருவெடுத்துள்ளது.