தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், நிகழாண்டு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகங்கள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 ஆம் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும். தனியார் பள்ளிகள் கட்டண வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.