நீட் மற்றும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு எப்போது நடக்கும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா பீதியால் தள்ளிவைக்கப்பட்ட நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? என்று அந்த தேர்வுகளுக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் பெரும் ஏக்கத்தில் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதற்கான பதிலை தேசிய தேர்வு முகமை எப்போது வெளியிடும்? என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் இதுதொடர்பாக பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
ஜே.இ.இ. முதன்மை தேர்வு வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறும். ஜே.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுக்கான அடுத்த தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த தேர்வுகளுடன் தொடர்புடைய வாரிய தேர்வுகள் (போர்டு எக்சாம்ஸ்), ஐ.ஐ.டி.க்கள் மற்றும் அதனை சார்ந்த பிற அமைப்புகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.