கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்-செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ‘ஊரடங்கு’ காவல் பணியில் இரவு பகல் பாராது எந்நேரமும் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
வைரஸ் பரவலைத் தடுப்பதில் அரசு சிறப்பாக செயல்படுகிறது மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் மதிப்பது என்பது கைதட்டுவதோடு நின்றுவிடக் கூடாது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரியூட்டப்பட்ட பின்னரோ அல்லது முறைப்படி புதைக்கப்பட்டுவிட்டாலோ நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நம்மைக் காக்கும் பணியில் ஈடுபட்டு காலமானவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது நம் கடமை.
S.A .சுபாஷ் பண்ணையார் தலைவர் பனங்காட்டு மக்கள் கழகம் .