புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதனை குறிப்பிட்டு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘மார்னிங் கன்சல்ட்’ நடத்திய கருத்துக்கணிப்பில், ஏப்.,14 வரையிலான நிலவரப்படி, கொரோனா ஒழிப்பில், பிரதமர் மோடி, உலக தலைவர்களிடையே முதலிடம் பெற்றுள்ளார். இவரது செயல்பாட்டுக்கு 68 சதவீத ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குறிப்பிட்டு நட்டா தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகளை பிரதமர் மோடி வழிநடுத்துகிறார். இந்திய மக்களுக்கு ஒருபுறம் பாதுகாப்பு அளித்துக் கொண்டே, உலக நாடுகளுக்கு தேவையான உதவிகளையும் மறுபுறம் செய்து கொண்டிருக்கிறார். இதனால், உலக தலைவர்களிடையே அவர் முதலிடம் பிடித்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும், நாட்டு மக்கள் அவரது தலைமை மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனர்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.