புதுடில்லி: நாளை (ஏப்.24) தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உளள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி.
கடந்த 1992-ம்ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி கிராம அளவில் உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வது தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கம்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை (ஏப். 24) நாடு முழுவதும் பஞ்சாயத்து அமைப்புகளுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாடுகிறார். அப்போது ஜி.பி.டி.பி. எனப்படும் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இ. பஞ்சாயத்து முறைக்கான போர்டல் மற்றும் மொபைல் செயலி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.