வாஷிங்டன்,
அந்த வகையில், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ‘ஸ்டார் லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தின்படி 2024-ம் ஆண்டுக்குள் 12 ஆயிரம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதற்கட்டமாக தலா 260 கிலோ எடையிலான 60 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு முறையும் 60 செயற்கைகோள் வீதம் 6 கட்டங்களாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், 7-வது கட்டமாக மேலும் 60 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து ‘பால்கான் 9’ ராக்கெட் மூலம் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த புதிய செயற்கை கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செயற்கைகோள்களுடன் இணைந்து செயல்பட உள்ளன.