சிறிய கடைகளை திறக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி
ஊரடங்கு தளர்வுக்கு முன்பே பதிவுபெற்ற அத்தியாவசிமற்ற பொருட்களின் கடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தனித்தனியாக செயல்படும் கடைகளையும் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறந்திருக்கும் கடைகளில் 50 சதவீத அளவு ஊழியர்கள் முககவசத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் வணிக வளாகங்களில் செயல்படும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் அறிவிப்பால் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அத்தியாவசியமற்ற பொருட்கள் சிறிய கடைகள் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.அதே நேரத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது. பதிவு சட்டத்தின் கீழ் மதுக்கடைகள் வராது என்பதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.
மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசு முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதிகளில் இந்த தளர்வு பொருந்தாது.