சிங்கப்பூரில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா வைரஸ்- சிங்கப்பூரில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக பாதிப்பு
சிங்கப்பூர்:
குட்டி நாடான சிங்கப்பூரில் இரண்டாவது தடவையாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சமுதாய பரவல் நிலையை எட்டி இருப்பதாகவும் தெரிகிறது. புதிதாக 931 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர். இந்தியர்களும் அடங்குவர். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெரிசலாக தங்கி இருப்பதால், அவர்களுக்கு கொரோனா எளிதாக தொற்றிக் கொண்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ‘ஒர்க் பெர்மிட்’ பெற்று தொழிலாளர் தங்குமிடங்களில் வசிப்பவர்கள் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 5 வாரங்களில், நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு இறங்கினால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று சிங்கப்பூர் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.