அவரம் அவசரமாக கச்சா எண்ணெய்- உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் சீனா என்ன நடக்க போகிறதோ என உலக நாடுகள் கலக்கம் அடைந்து உள்ளன.
பெய்ஜிங்
சீனாவில் முதன் முதலில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல், பல்வேறு நாடுகள் திணறி வருகின்றன.ஆனால், சீனாவில் தற்போது இயல்பு வாழ்க்கை துவங்கிவிட்டது.மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.
சீனாவின், உகான் நகரில் கொரோனா பரவியதும், இதர நாடுகளில் உள்ள சீன நிறுவனங்கள், 200 கோடி முக கவசங்களை கொள்முதல் செய்து அனுப்பி வைத்தன. அந்த வகையில், கடந்த 29-ஆம் தேதி நிலவரப்படி முக கவசம் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்புக்கான, 246 கோடி உபகரணங்கள் சீனாவில் இறக்குமதி ஆகின. சுங்க அதிகாரிகளின் சோதனைக்குப் பின், அவை உலக நாடுகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் மேற்பார்வையில், இந்த விற்பனை நடைபெற்றது.
கச்சா எண்ணெயின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், அதன் தேவை குறைந்துள்ளதால், விலையும் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. ஊரடங்கால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால், பல நாடுகளின், கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகரித்து, சேமித்து வைக்க திணறி வருகின்றன.
இந்த சமயத்தில், சீனா, வழக்கத்தை விட அதிகமாக, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மார்ச்சில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
சீனா, அதன் மொத்த எண்ணெய் கொள்ளளவில், 65 சதவீதத்தை சேமித்து வைத்துள்ளதாக, புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது. இது மட்டுமின்றி மூன்று பிரமாண்ட எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை சீனா கட்டி வருகிறது. கச்சா எண்ணெய்க்கு, பிற நாடுகளை சார்ந்திருக்க சீனா விரும்பாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிச்சயமாக பஞ்சம் நிலவும் என்று பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளதால், சீனா இப்போதே உணவு தானியங்களை வேகமாக சேகரித்து வருகிறது. ஏற்கனவே இறக்குமதியான, கோடி டன் எடை கொண்ட சோயா போக, மேலும், கோடி டன் இறக்குமதி செய்ய, சீனா திட்டமிட்டுள்ளது.
அதுபோல, கோடி டன் சோளம், 10 லட்சம் டன் பருத்தி ஆகியவையும், அதன் கிடங்கில் சேர்ந்துள்ளன. சீனா, 2017-ல் வாங்கியதை விட, இந்தாண்டு, கூடுதலாக, 93 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை, அமெரிக்காவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
கொரோனாவால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நாடுகளில், ஏராளமான நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவடைந்துள்ளது. இதை சாதகமாக்கி, பிற நாடுகளின் முன்னணி நிறுவனங்களை வளைத்துப் போட சீனா முயற்சி செய்து வருகிறது.சமீபத்தில், சீன மத்திய வங்கி, இந்தியாவின் வீட்டு வசதி கடன் நிறுவனமான, எச்.டி.எப்.சி.யின், 1 சதவீத பங்கை, 3,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது.சுதாரித்த இந்தியா, இனி, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள், அரசு அனுமதியின்றி, நேரடி முதலீடு மேற்கொள்ள தடை விதித்துள்ளது.