முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடி சேர்ந்துள்ளது – நிதி அளித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் நன்றி

Spread the love

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடி சேர்ந்துள்ளது. நிதி அளித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கடந்த 20-ந் தேதி வரை, மொத்தம் 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலான 10 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பலரும் நிதி வழங்கியுள்ளனர். அதில் அசோக் லேலண்ட் நிறுவனம் மற்றும் ஹிந்துஜா லேலண்ட் நிறுவனம் ரூ.2 கோடியே 75 லட்சம், பதிவாளர், அண்ணாமலைப்பல்கலைக்கழகம் 1 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 67 ரூபாய்,

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் 1 கோடியே 2 லட்சத்து 88 ஆயிரத்து 66 ரூபாய், வி.ஆர் வெங்கடாசலம் 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய், டி. வி எஸ் ஸ்ரீ சக்கரா நிறுவனம் 1 கோடி ரூபாய், அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய். சேஷசாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ் நிறுவனம் 62 லட்சம் ரூபாய், ஜி.ஆர். தங்கமாளிகை 54 லட்சத்து 1 ஆயிரத்து 826 ரூபாய் மேட்ரிமோனி டாட் காம் 50 லட்சம் ரூபாய்.

ரூ.306 கோடி

வ.உ.சி. துறைமுகம், தூத்துக்குடி 50 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கோழி முட்டை பண்ணை விவசாயிகள் மற்றும் விற்பனை சங்கம் 50 லட்சம் ரூபாய், சங்கீதா கல்யாண மண்டபம் 50 லட்சம் ரூபாய், சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் 50 லட்சம் ரூபாய், டி.வி.எஸ் நோவோடெமா எலஸ்டோமெரிக் என்ஜினீயர் 50 லட்சம் ரூபாய், அறம் மக்கள் நலச் சங்கம் 50 லட்சம் ரூபாய், மேசி அறக்கட்டளை நிறுவனம் 50 லட்சம் ரூபாய்,

இயக்குநர், நாகா லிமிடெட் 50 லட்சம் ரூபாய். விநாயகா மிஷன் 50 லட்சம் ரூபாய், மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம் 32 லட்சத்து 37 ஆயிரத்து 862 ரூபாய், டி.வி.எஸ் சுந்தரம் 25 லட்சம் ரூபாய்.

மேலும் பல நிறுவனங்கள் நிதி அளித்த வகையில் கடந்த நாட்களில் மட்டும் பல்வேறு தரப்பினரிடமிருந்து 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் ஆகும். நிவாரண நிதி அளித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியமான 110 கோடி ரூபாயை மனமுவந்து அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். இதைத் தவிர, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி மாவட்ட ஆளுனர், சென்னை 3 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள், பெப்சிகோ நிறுவனம் மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் சார்பில் திரிசூலம், திருநீர்மலை, அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பல்லாவரம் ஆகிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு முப்பது நாட்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவில், 2,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு,

அஸ்ட்ரா ஜெனிகா இந்தியா பிரைவேட் நிறுவனம் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்க எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, முதல்- அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page