சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் அவமதிப்பு செய்து விட்டனர். இந்த செயலை கண்டித்து பனங்காட்டு மக்கள் கழகத்தின் மாநில தலைமையின் அழுத்தம் காரணமாக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆவண செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் நடைபெற்ற தேக்கம்பட்டி கிராமத்திற்கு பனங்காட்டு மக்கள் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் மோகனவேல் நாடார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்றனர்.
அங்கு அமைந்துள்ள ஐயாவின் திருஉருவ சிலையை சுத்தப்படுத்தி பாலாபிஷேகம் செய்து மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரம், கணேசன் , டிங்கு , செந்தில் , பெரியண்ணன் , தமிழ்ச்செல்வன் ,செந்தில் குமார் ,தாமஸ் நாடார் , செல்வேந்திரன் , பரத், ஈஸ்வரன் , பாபு , மௌலி , ராஜேஷ் மற்றும் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் சுவாமிநாதன் , சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்பு துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த சேலம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் , சூரமங்கலம் பகுதி காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும் நமது பனங்காட்டு மக்கள் கழகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.