தமிழகத்தில் நாளை முதல் மேலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
சென்னை,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் தளர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளது. 34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
* பூ, பழம், காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்படலாம்.
* டீக்க்டைகள், பேக்கரிகள் உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம்.
*சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
*இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் திறக்கலாம்.
*ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கலாம்
*இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், கணினி விற்பனை கடைகள் செயல்படலாம்.
*மின் சாதன பழது நீக்கும் கடைகள் செயல்படலாம்.
* நாட்டு மருந்து விற்பனை கடைகளை திறக்கலாம்.
* ஜெராக்ஸ் கடைகள் செயல்படலாம்.
*சாலையோய்ர தள்ளு வண்டி கடைகள் செயல்படலாம்.
*மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது பார்க்கும் கடைகள்