தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இந்தியாவின் அதிக நபர் பாதித்த 3-வது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம்: 3-வது இடத்தில் தமிழ்நாடு
கொரோனா விழிப்புணர்வில் போலீசார் (பழைய படம்)
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது. அதன்பின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
அதன்பின் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போதுதான் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இதனால் கடந்த 1-ந்தேதியில் இருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
மகாராஷ்டிர 22,171 எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது. குஜராத் 8195 மூலம் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி 6923 மூலம் 4-வது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 3614 பேரும், உத்தர பிரதேசத்தில் 3462 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.