சென்னை :
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர், இ.பி.எஸ்., இன்று(மே 13) ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா ஊரடங்கு, வரும், 17 வரை அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; ஊரடங்கை தளர்த்துதல்; பஸ் போக்குவரத்தை துவக்குதல்; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை அனுமதித்தல் போன்றவை குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், இன்று காலை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, ஆலோசனை நடத்த உள்ளார்.