தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே 20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் நோக்கம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தார். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்து விளக்குவதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
*விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்திருக்கிறார்.
* சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
*தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
*பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*வளர்ச்சியை ஏற்படுத்தவும் தன்னிறைவு உருவாக்கவும் இந்த சுயசார்பு பாரத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.
*மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.