அமெரிக்காவில் கொரோனா பலி 1½ லட்சம் ஆக உயரும் என்று புதிய கணிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அங்கு 14 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர். சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காத நிலையில், ஏறத்தாழ 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு ஆகஸ்டு மாத தொடக்கத்தின்போது, கொரோனா வைரசுக்கு பலியாவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரம் ஆக உயரும் என புதிய கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த கணிப்பை கூறியிருப்பது சியாட்டில் நகரில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு இன்ஸ்டிடியூட் ஆகும். இந்த நிறுவனம் முதலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 475 பேர் பலியாவார்கள் என கடந்த வாரம் கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று, தனது உச்ச நிலையை கடந்து விட்டதாக டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது. மாகாணங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஊக்கம் அளித்தும் வருகிறது.