வெங்காயம், தக்காளி , உருளையையடுத்து அனைத்து பழம், காய்கறிக்கு ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டம் விரிவாக்கம்- நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் ஆபரேஷன் கிரீன்ஸ் எனப்படும் நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டிஒபி பயிர்கள் என அழைக்கப்படும் வெங்காயம், தக்காளி , உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்யும் திட்டமாகும்.
இந்நிலையில் ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டம் வெங்காயம், தக்காளி, உருளையையடுத்து அனைத்து பழம், காய்கறிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்